
ශ්රී ලංකා ග්රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.
June 3, 2023
இந்த பாடத்திட்டமானது , பாடசாலை மற்றும் சர்வதேச வானியல் ஒலிம்பியாட் பாடத்திட்டத்திற்கு அமைவுற , வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம் தொடர்பான விடயங்களினை உள்ளடக்கி உள்ளன, அவை தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விளக்கப்படுத்தப்படும்.
இந்தப் பாடத்திட்டத்திற்குத் தகுதிபெற, நீங்கள் 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்பில் பயிலும் ஒரு மாணவராக இருக்க வேண்டும் என்பதுடன் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்தினை கற்றுக்கொள்வதில் அதீத ஆர்வம். கொண்டிருத்தல் வேண்டும்.
வருடத்திற்கு இரண்டு முறை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பாடத்திட்டதின் காலவரையறை ஆறு மாதங்கள்
அடுத்த உள்ளெடுப்பு: 2023 ஜனவரி
இலங்கையில் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத் துறையில் ஆர்வமுள்ள ஏராளமான மாணவர்கள் உள்ளனர். ஆனால், இத்துறையில் போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்காததால், பாடத்தை கைவிடும் நிலைக்கு உட்படுகின்றனர்.
இந்தப் பாடத்தின் நோக்கம், ஆர்வம்/ஆசை மற்றும் அறிவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதோடு, பிரபஞ்சத்தின் இயல்பு தொடர்பான எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் உண்மையான அனுபவத்துடன் வந்து கற்றுக்கொள்ளக்கூடிய இடமாகவும் அமைத்தலாகும்.
மேலும், ஒரு மாணவர் தனது வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம் தொடர்பாக உள்ள தனது அறிவின் தாகத்தை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள மற்ற மாணவர்களிடையே வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் தேசத்தின் கல்வித்துறைக்கும் சேவையாற்றவும் முடியும்.
1வது உள்ளெடுப்பு – ஜனவரி
2வது உள்ளெடுப்பு – ஜூலை
First Intake – January
Second Intake – July
இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.
பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.