Loading

ශ්‍රී ලංකා ග්‍රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.

November 14, 2024

கண்ணோட்டம்

நோக்கு

பிரபஞ்சம் பற்றிய பரந்த கண்ணோட்டத்துடன் பொதுமக்களுக்கு அவை தொடர்பில் அறிவினை புகட்டுவதன் மூலம் இலங்கையில் வானியல் கற்கை பற்றிய அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துதல்.

பணி

கோள் மண்டலத்தில் உள்ள உலகளாவிய தரத்திலான காட்சி இயந்திரம் (Universal Projector) மற்றும் கட்புல – செவிப்புல கருவிகள் என்பனவற்றின் ஊடாகவும் ,தொலை நோக்கு காட்டிகளின் பயன்படுத்துகையுடன் இரவு வான் அவதானிப்பு முகாம்களினை நடத்துவதன் மூலமும் வெளிவாரி அடிப்படையில் நடமாடும் கோள் மண்டல நிகழ்வுகள் , விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வானியல் பற்றிய கற்கை நெறிகளினை நடத்துவதன் மூலமும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் வானியல் பற்றிய அறிவினை புகட்டுதல்.

குறிக்கோள்கள்

பொது மக்களுக்கு வானியல் பற்றிய நாளது வரையிலுமான தகவல்களை வழங்கல் . பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம் பற்றிய அறிவை மேம்படுத்தல்.

வரலாறு

அரச எந்திரவியல் கூட்டுத்தாபனத்தினால் ,தாபிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காக , குறிப்பாக இரவு வானத்தை உருவாக்கும் திறனை வெளிப்படுத்தும் பொருட்டு1965 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி இலங்கை கைத்தொழில் கண்காட்சிக்காக திறந்து வைக்கப்பட்டது.

முன்னைய பொறியியலாளர் கலாநிதி A. N. S. குலசிங்க அவர்களினால் வடிவமைக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய கோள் மண்டலங்களில் ஒன்றான இலங்கை கோள் மண்டலமானது , 23 மீற்றர் விட்டத்தினையும் மற்றும் 550 ஆசனங்களைக் கொண்டுள்ளது.

உலகத்தில் பிரபஞ்சத்தினை காட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிய வகையினை சார்ந்த காட்சி இயந்திரங்களில் ஒன்றே கோள் மண்டலத்தில் உள்ள எமது காட்சி இயந்திரமாகும்.

முழு கோள வடிவிலான காட்சிகளினை முன்னளிப்பு செய்வதற்கு 2014 ஆம் ஆண்டில் Digital Power Dome காட்சி இயந்திர முறைமை நிறுவப்பட்டது.

இலங்கை கோள் மண்டலத்தின் வரைபடங்கள்

1965 ஆம் ஆண்டில் இலங்கை கோள் மண்டலம்

உலகளாவிய தரத்திலான காட்சி இயந்திரம்

முழு கோள வடிவிலான காட்சி இயந்திரம்

எம்முடன் தொடர்பு கொள்க

இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர  மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

(+94)11 2586499

துரித இணைப்புக்கள்

தொடர்புடைய நிறுவனங்கள்

பதிப்புரிமை © 2022 இலங்கை கோள் மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.

Shopping Basket